கிழக்கு யுக்ரெய்ன் போர்நிறுத்த உடன்படிக்கை

ukraine_AAபலவீனமான நிலையில் தற்போது இருக்கும் கிழக்கு யுக்ரெய்ன் போர் நிறுத்ததை மீள அமல்படுத்துவதற்கான 9 அம்சத் திட்டம் ஒன்றை யுக்ரெய்னிய அரசாங்க சமரசப் பேச்சுவார்த்தையாளர்களும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிக்காரர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தாக்குதல் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதுடன், 30 கிலோ மீட்டருக்கு எதிர்தரப்புப் படைகள் இடையே ஒரு இராணுவ சூனிய பிரதேசத்தை ஏற்படுத்துவதும் இந்த உடன்படிக்கையில் அடங்கும்.

ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பு தமது கண்காணிப்பாளர்களை அங்கு நிறுத்துவதுடன், யுக்ரெய்னிய பகுதிகளில் இருந்து வெளிநாட்டுப் போராளிகளும் வெளியேறிவிட வேண்டும்.

பெலரஸில், யுக்ரெய்னிய அரசாங்கம், ரஷ்யா, பிரிவினைவாதப் படையினர் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றின் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்த உடன்பாடு வந்தது.