அமெரிக்க விமானப்படையினர் சிரியாவின் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது நடத்திய அதிரடி குண்டு வீச்சில் 120 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவில் நேற்று அமெரிக்க விமானப்படையினர் அதிரடித் தாக்குதலை மேற்கொண்டதில் 120 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை சிரியா போர் குறித்த தகவல்களை கவனித்து வரும் மனித உரிமை அமைப்பான சிரியா அப்சர்வேட்டரி பார் ஹியூமன் ரைட்ஸ் (Syrian Observatory for Human Rights (SOHR) என்ற அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு ரமி அப்துல் ரஹ்மான் (Rami Abdul Rahman) கூறுகையில், தீவிரவாதிகள் வசித்த ரக்கா (Raqqa), டெயர் அல் ஸோர் (Dayor Al Sor), ஹஸகா (Hasaka) ஆகிய பகுதிகளில் தான் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
120 என்பது குறைந்ததுதான், உண்மையில் இதை விட அதிக அளவிலான தீவிரவாதிகள் பலியாகியிருப்பார்கள் என கருதுகிறோம் என்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை 300க்கும் மேல் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.