ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை வேரோடு அழிக்க வேண்டும்: ஒபாமா சூளுரை

obama_UNவாஷிங்டன்: ஈராக்கிலும்,சிரியாவிலும் ஐ.எஸ்.பயங்கரவாதிகளின் கொடூர செயல் கவலையளிப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார்.

வேரோடு அழிப்போம் : ஐ.நா. பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. கூட்டத்தினை துவக்கி வைத்து அதிபர் ஒபாமா பேசினார்.
அவர் பேசியதாவது, ஈராக்கிலும்,சிரியாவிலும் ஐ.எஸ்.ஐ.எஸ்.,மற்றும் அல்குவைதா போன்ற பயங்கரவாதிகளின் கொடூர செயல் மனதிற்கு கவலையளிக்கிறது. புற்றுநோய் போன்றது பயங்கரவாத செயல்களும், பயங்கரவாத அமைப்புகளும் தான் . இவை உலகத்திற்கு பேரழிவை தரக்கூடியது. இவர்களால் பல உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களை ஒழித்துக்கட்ட சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். அதில் வெற்றியை விட அமைதியை தான் அமெரிக்கா விரும்புகிறது. எனவே ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றம் அல்குவைதா போன்ற பயங்கரவாத அமைப்புகளை வேரோடு ஒழித்துக் கட்ட வேண்டும். இதற்கு ஐ.நா.உறுப்புகள் கொடுக்கும் அழுத்தத்தின் மூலம் அவர்களை வெற்றிகொள்ள முடியும். பயங்கரவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை என்பது கிடையாது. அல்குவைதா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புகளை அனைத்து நாடுகளும் நிராகரிக்க வேண்டும். இந்த அமைப்புகளுக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒனறு திரள வேண்டும்.

ரஷ்யாவை எச்சரித்த ஒபாமா: போரை எதிர்கொள்வதா? அல்லது அமைதியை நிலைநாட்டுவதா என்ற நிலையில் தற்போது உள்ளோம். இதே போன்று தான் உக்ரை உள்நாட்டு போரையும் முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கிறோம். சிறிய நாடுகளை (உக்ரைன் ) பெரிய நாடுகள் (ரஷ்யா ) ஆக்கிரமிக்க நினைப்பதும், அழிக்க நினைப்பதும் சரியல்ல. அதை அனுமதிக்கவும் மாட்டோம். உக்ரைன் மக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.ஆசிய-பசிபிக் அமைப்பிலும் உள்ள நாடுகளில் அமைதிக்கு உறுதியளிப்போம். ஆசிய பசிபிக் பகுதியில் அமைதி வாய்ந்த சக்தி மிக்க நாடாக அமெரிக்கா தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.