பாரீஸ்:அல்ஜீரியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற் கொண்ட பிரான்ஸ் நாட்டு சுற்றுலாபயணியை அல்ஜீரிய தீவிரவாத குழுக்கள் கடத்தி, தலையை துண்டித்து கொலை செய்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இந்த குழுவினர் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது. உள்நாட்டு பிரச்னையில் சிக்கி தவித்து வரும் சிரியாவில் பிரான்ஸ் உட்பட மேற்கத்திய நாடுகள் தலையிட்டு்ள்ளன. இந்நிலையில் அல்ஜீரியாவை சேர்ந்த தீவிரவாதிகள் குழுவினர் சிரியா பிரச்னைகளில் இருந்து பிரான்ஸ் நாடு விலகி்க் கொள்ள வேண்டும் என பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹோலண்டேவுக்கு 24 மணி நேர கெடு வதித்துள்ளனர்.
முன்னதாக அல்ஜீரியாவில் சுற்றுலா சென்றுள்ள பிரான்ஸ் சுற்றுலா பயணி ஹார்வி கோர்டலை பிணை கைதியாக பிடித்து வைத்து கொன்று விடுவதாகவும் மிரட்டல் விடுத்திருந்தனர். இந்நிலையில், சுற்றுலா பயணியை கொலை செய்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.