அணு ஆயுத அச்சத்தை விடுத்து ஐ.எஸ்.ஸை கவனியுங்கள்: அமெரிக்காவுக்கு ஈரான் அறிவுரை

iran-nuke-programsதங்கள் நாடு அணு ஆயுதம் தயாரிக்குமோ என்ற தேவையற்ற அச்சத்தை கைவிட்டு, உலகை அச்சுறுத்தும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மீது கவனம் செலுத்துமாறு அமெரிக்காவுக்கு ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி அறிவுரை வழங்கியுள்ளார்.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் சென்றுள்ள அவர், தனியார் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் புதன்கிழமை கூறியதாவது:

அணுசக்திப் பேச்சுவார்த்தையில் ஈரானுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் தந்திரத்தை அமெரிக்கா கைவிட வேண்டும்.

அணு ஆயுதம் தயாரிப்பதில் ஈரானுக்கு துளியும் நாட்டமில்லை.

எனவே, முக்கியத்துவம் இல்லாத அந்தப் பிரச்னையை அமெரிக்கா புறந்தள்ள வேண்டும்.

அதற்கு பதிலாக, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான போரில் அந்நாடு அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பயங்கரவாதமே நிதர்சனமான, தீவிரமான, அனைவருக்கும் பொதுவான அச்சுறுத்தலாகும் என்றார் ரெளஹானி.