100 பேர் படுகொலை, 12 பேர் தலை துண்டிப்பு: தலீபான்களின் வெறிச்செயல்

100_killed_001ஆப்கானிஸ்தானில் ஒரே வாரத்தில் 112 பேரை கொடூரமாக தலீபான்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் விலகத் தொடங்கியதைத்து தலீபான்களின் வன்முறை வெறியாட்டம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக நாட்டின் கிழக்கு பகுதியில் ஒரே வாரத்தில் 100 பேரை கொன்ற தலீபான் தீவிரவாதிகள், 4 கிராமங்களில் புகுந்து 12 பேரின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து துணை ஆளுநர் முகமது அலி அகமதி (Muhammad Ali Ahemed) கூறுகையில், ஒரு வாரத்தில் மட்டும் 80 முதல் 100 பேரை அவர்கள் படுகொலை செய்திருக்கலாம் என்றும் இதுவரை 70 வீடுகளுக்கு தீ வைத்ததால் நாட்டின் நிலை மிக மோசமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.