ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பலத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.
பிரபல செய்தி நிறுவனத்துக்கு நேற்று பேட்டியளித்த ஒபாமா கூறுகையில், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சியை அமெரிக்கா குறைத்து மதிப்பிட்டு தவறிழைத்து விட்டது.
தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், ஈராக் ராணுவத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்து விட்டோம் என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க தற்போது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்கள் இடையேயான மோதலை தடுக்க அரசியல் ரீதியிலான அணுகுமுறை அவசியமாகும்.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் ஆதிக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க 50 நாடுகளின் கூட்டுப்படை தாக்குதல் நடத்தி வந்தாலும் ஐஎஸ் அமைப்புக்கு வெளியில் இருந்து வரும் நிதி ஆதாரத்தை முடக்க வேண்டும்.
இதன் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பகுதியின் அளவு சுருங்கி விடும்.
மேலும், உலகில் எந்த நாடுகளில் தீவிரவாதிகளால் பிரச்னை ஏற்பட்டாலும் முதலில் அமெரிக்காவை தான் அணுகுகின்றனர் என்றும் ரஷ்யாவையோ, சீனாவையோ யாரும் அணுகுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் மீது தாக்குதல் வேண்டாம்! உலக நாடுகளுக்கு அல்கொய்தா மிரட்டல்
இராக்கில் இஸ்லாமிய தேச(ஐ.எஸ்.ஐ.எஸ்) அமைப்பு மீது தாக்குதலில் ஈடுபடும் நாடுகளுக்கு எதிராக பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படும் என அல்-கொய்தாவின் சிரியா பிரிவு மிரட்டல் விடுத்துள்ளது.
ஈராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
சிரியாவில் நடைபெறும் தாக்குதலில், அமெரிக்காவுடன் இணைந்து பஹ்ரைன், ஜோர்டான், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் போர் விமானங்களும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது குண்டு வீசி வருகின்றன.
இந்நிலையில் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் இலக்குகள் மீது தனது விமானத் தாக்குதலை பிரித்தானியாவும் தொடங்கிய நிலையில் அல்-கொய்தாவின் சிரியா பிரிவான அல்-நுஸ்ராவின் செய்தித் தொடர்பாளர் அபு ஃபிராஸ் அல்-சுரி இணையத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக பல்வேறு நாடுகளும் நிகழ்த்தி வரும் வான்வழித் தாக்குதல், இஸ்லாம் மதத்துக்கு எதிரான போராகும்.
இந்தச் செயல் மூலம், அந்நாடுகள் உலகம் முழுவதிலுமுள்ள புனிதப் போராளிகளின் தாக்குதலுக்கு இலக்காகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸின் வன்முறைக்கு அஞ்சி, 1.6 லட்சம் அகதிகள் அண்டை நாடான துருக்கியில் தஞ்சமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பேசாமல் குண்டு மலை பொழியுங்க ,பேசிக்கு இடமளிகாதேங்க