சமாதான புறாவில் தீவிரவாதம்: தலை தூக்கும் வெறிச்செயல்

bird_terror_001சீன நாட்டில் பறக்கவிடப்படும் புறாக்களில் வெடிகுண்டு மற்றும் மர்ம பொருட்களை கட்டிவிட்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

சீனாவில் கடந்த 1ம் திகதி 65வது தேசிய தினம் கொண்டாடப்பட்டது. அன்று சமாதானத்தை குறிக்கும் வகையில் வரலாற்று சிறப்பு மிக்க டியானமென் சதுக்கத்தில் 10 ஆயிரம் புறாக்கள் பறக்க விடப்பட்டன.

தற்போது சீனாவில் தீவிரவாதம் பெருகி வருகிற நிலையில் பறக்க விடப்படும் புறாக்களில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருட்களை கட்டி விட்டு அதன் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதை தொடர்ந்து டினாயமென் சதுக்கத்தில் பறக்க விட தயாராக வைத்திருந்த 10 ஆயிரம் புறாக்களையும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

புறாக்களின் இறகுகள், கால்கள் மற்றும் பின்பகுதியில் இச்சோதனை நடைபெற்றது.

அதன் பின்னர் இந்த புறாக்கள் அனைத்தும் ஒரு வாகனத்தில் அடைக்கப்பட்டது. பிறகு வாகனம் ‘சீல்’ வைக்கப்பட்டு விழா நடந்த டினாயமென் சதுக்கத்துக்கு கொண்டு வரப்பட்டு வானில் பறக்க விடப்பட்டன.