கிழக்கு உக்ரைனில் விமான நிலையத்தை கைப்பற்ற தீவிர மோதல்

russian_troops_001கிழக்கு உக்ரைனில் வாழும் ரஷ்ய ஆதரவாளர்கள் தன்னாட்சி உரிமை கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. அதில் கிழக்கு உக்ரைனில் பெரும் பகுதிகள் கிளர்ச்சியாளர்கள் வசம் வந்தது.

அதை தொடர்ந்து கடந்த மாதம் ஐந்தாம் திகதி இரு தரப்பினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால் அமைதி திரும்பியது. இருந்தும் அவ்வப்போது இரு தரப்பினரும் தாக்குதல்கள் நடத்தி வந்தனர்.

கிழக்கு உக்ரைனில் டொனெஸ்ட்க் விமான நிலையம் தற்போது கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளது. அதை மீண்டும் கைப்பற்ற உக்ரைன் ராணுவம் களமிறங்கியுள்ளது. இதனால் அங்கு தாக்குதல் மீண்டும் கடுமையாக உள்ளது.

தற்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடக்கிறது. கிளர்ச்சியாளர்கள் புகை குண்டுகளை வீசி ராணுவ வீரர்கள் வராமல் தடுத்தனர்.

இந்த தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் பலர் கொல்லப்பட்டதாகவும், 3 டாங்கிகள் அழிக்கப்பட்டதாகவும் ராணுவம் தரப்பில் கூறப்பட்டது. மேலும் 2 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 9 பேர் காயம் அடைந்துள்ளனர்.

தற்போது விமான நிலையம் முழுவதையும் கைப்பற்றி விட்டதாக கிளர்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை ராணுவம் மறுத்துள்ளது. விமான நிலையத்தின் பாதி பகுதியை மீட்டு விட்டதாக ராணுவ கூறியுள்ளது.