ஐ.எஸ்.ஐ.எஸ் பிடியில் பிணைக்கைதியாக இருக்கும் அமெரிக்க இராணுவ வீரர் ஒருவரை அடுத்து கொல்லபோவதாக தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக சர்வதேச நாடுகள் நடத்தும் வான்வழி தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரவாதிகள் தொடர்ந்து தலை துண்டிப்புகளை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் பிரித்தானிய பிணைக்கைதி ஆலன் ஹென்னிங்ஸ் (Alan Hennings) என்பவரின் தலை துண்டித்து தீவிரவாதிகள் வெளியிட்ட காணொளியின் இறுதியில் தங்களிடம் மற்றொரு பிணைக்கைதியாக உள்ள அமெரிக்காவை சேர்ந்த பீட்டர் கஸ்சிக் (Peter Kassig) என்பவரை அடுத்து கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
முன்னாள் இராணுவ வீரரான பீட்டர் கஸ்சிக், சிரியாவின் இராணுவ முகாமில் சமூக சேவை செய்து வந்தபோது, கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் 1ம் திகதி தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார் என கூறப்படுகிறது.
இஸ்லாமிய இளம் பெண்களையே பாலியல் கொடுமைக்கு ஆளாக்குகிறீர்கள். இதெல்லாம் உங்களுக்கு என்ன பெரிய வேலையா!