பெரும் பின்னடைவில் அல் ஷபாப் தீவிரவாதிகள்

al_shabab
பெரும் பின்னடைவில் அல் ஷபாப் தீவிரவாதிகள்

அல் ஷபாப் தீவிரவாதக் குழுவின் பலமிக்க கடைசி கடற்கரையோரப் பிரதேசத்தை தாம் கைப்பற்றிவிட்டதாக சோமாலிய அரசாங்கம் கூறியுள்ளது.

பரவே என்னும் துறைமுக நகரை ஆப்பிரிக்க ஒன்றிய படைகளின் உதவியுடன் முழுமையாக கைப்பற்றிவிட்டதாக அந்தப் பிராந்திய ஆளுனர் தெரிவித்துள்ளார்.

தலைநகர் மொகதிசுவில் இருந்து தென்மேற்காக 200 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள இந்த நகரம் கடந்த 6 வருடங்களாக அல் ஷபாப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது.

தீவிரவாதிகள் கடந்த இரவு நகரை விட்டு பின் வாங்கியபோது, கொஞ்சம் சண்டையும், ஷெல் தாக்குதலும் நடந்ததாக ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சார்பிலான பேச்சாளர் ஒருவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னதாகவே அல் ஷபாப் பின்வாங்கத் தொடங்கிவிட்டது. -BBC