நடுக்கடலில் வீசப்பட்ட ஒசாமா பின்லேடனின் உடல்: என்ன காரணம்? பரபரப்பான தகவல்கள் வெளியானது

bin_laden_001அல்கொய்தா அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடனை கொன்ற பின் அவனை கடலில் வீசியதற்கான காரணம் பற்றி அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2001ம் ஆண்டு செம்டம்பர் 11ம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் (Newyork) மாகாணத்தில் உள்ள உலக வர்த்தக மைய கோபுரத்தின் மீது பின்லேடன் தலைமையில் அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி 2ம் திகதி அமெரிக்க இராணுவம் எடுத்த ‘ஆபரேஷன் நெப்டியூன் ஸ்பியர்’ என்னும் நடவடிக்கையில் பின்லேடன் சுட்டு தள்ளப்பட்டு கடலில் வீசப்பட்டான். ஆனால் அதன்பின் பின்லேடனின் நிலை என்ன? இவ்வாறு செய்ததற்கு காரணம் என்ன?என்ற கேள்விகளுக்கு இன்று வரை பதில் இல்லை.

இதற்கு புத்தகம் ஒன்றில் அமெரிக்க உளவுத்துரை சி.ஐ.ஏ யின் முன்னாள் இயக்குனரும், ராணுவ அமைச்சரமான லியோன் பானட்டா (Leon Panetta)பதிலளித்துள்ளார்.

அந்த புத்தகத்தில் அவர் கூறியதாவது, பின்லேடனின் உடல் 300 பவுண்ட் எடையுள்ள இரும்புச்சங்கிலியால் உருவாக்கப்பட்ட பைக்குள் வைத்து நடுக்கடலில் வீசப்பட்டது என்றும் உடல் முழுமையாக கடலுக்குள் மூழ்கி அவன் உயிர்தப்பி விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.