யேமனில் அல்-காய்தா தாக்குதல்: 10 போலீஸார் பலி

al_shababயேமன் நாட்டில் அல்-காய்தா பயங்கரவாதிகள் புதன்கிழமை நிகழ்த்திய தாக்குதல்களில் 10 போலீஸார் கொல்லப்ப்பட்டனர்.

அந்நாட்டின் பைடா நகரிலுள்ள காவல்துறை, ராணுவ மையங்களைக் குறிவைத்து அந்தத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.

பயங்கரவாதி ஒருவர் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் மட்டும் 9 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள்

தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல்களுக்கு அல்-காய்தா அமைப்பே காரணம் என போலீஸார் தெரிவித்தனர். முன்னதாக, அல்-காய்தாவோடு தொடர்புடைய பழங்குடியினர் அமைப்புகளின் தலைவர்கள் ஒன்று கூடி, பைடாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கி வருவதைத் தடுக்க வேண்டும் என முடிவெடுத்தது.

தலைநகர் சனாவையும், நாட்டின் பல பகுதிகளையும் கைப்பற்றியுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு பைடா நகர பாதுகாப்புப் படையினர் ஆதரவளித்து வருவதாக சன்னி பிரிவு அமைப்பான அல்-காய்தா குற்றம் சாட்டி வருகிறது.