சிரியாவின் எல்லை நகரமான கோபனி நகரை கைப்பற்றுவதற்காக 500 குர்திஷ் போராளிகளை, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர்.
குர்து இன மக்கள் அதிகம் வசித்து வரும் சிரியா-துருக்கி எல்லையில் கோபனி (Kobani) நகரத்தை கைப்பற்றுவதற்காக கடந்த 16ம் திகதி முதல் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களது தாக்குதலை தொடங்கியுள்ளனர்.
இந்த போரினால் அந்நகரத்தை விட்டு இதுவரை சுமார் 2 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக தாக்குதல் வலுவடைந்துள்ளதால் இதுவரை 500 குர்திஷ் போராளிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் கொலை செய்துள்ளனர்.
தற்போது கோபனி நகரின் கிழக்கு, வடகிழக்கு மற்றும் தென்பகுதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றி முன்னேறிச் செல்கின்றனர்.
இந்நிலையில் கோபனி நகரம் தீவிரவாதிகள் வசம் வீழ்ந்தால் அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் நடவடிக்கைக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என கூறப்படுகிறது.