37 நாட்களாய் மாயமான ஜனாதிபதி: பீதியில் உறைந்த மக்கள்

kim_lost_001வட கொரியாவின் ஜனாதிபதி கிம் ஜோங் உன், கடந்த 37 நாட்களாய் யார் கண்ணிலும் படவில்லை என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகொரியாவின் அமைச்சர் கிம் ஜோங் உன் (Kim Jong un Age-31) உடல்நிலை சரியில்லை என அந்நாட்டின் தொலைக்காட்சிகளில் காண்பிக்கபட்டது.

அப்போது அவர் சட்டசபையிலும் வருவதை தவிர்த்தது மட்டுமின்றி பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதை நிராகரித்தாக கூறப்பட்டது.

இதனால் அவர் தலைமையிலான வட கொரியாவில் நடக்கவிருந்த ராணுவப் புரட்சி நடைபெறாமல் போனதுடன், அங்கு உள்நாட்டு குழப்பம் நடப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இந்த நீண்ட நாள் இடைவேளியால், இவர் எபோலோவால் தாக்கப்பட்டிருக்கலாமோ? அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தியிருக்கலாமோ என்ற மக்கள் தரப்பில் கேள்விகள் எழுந்துள்ளன.

இவர் பொது இடங்களில் காணப்படவில்லை என்றாலும் அவர் நலமாக இருப்பதாக தற்போது வட கொரியாவின் அரசு தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பி வருகிறது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பகை நாடான தென்கொரியா, தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற அச்சமும் வட கொரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.