ஆறு பெண்களை கொடூரமாக கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ்

isis_threat_001ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடூர செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அங்குள்ள யாஸிடி இன மக்களை மதம் மாற சொல்லி வற்புறுத்தி வருகின்றனர், மீறினால் மரண தண்டனை தான்.

இந்நிலையில் ஈராக்கின் இரண்டாவது மிகப் பெரிய நகரான மொசூலின் பல பகுதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் வசம் வைத்துள்ளனர்.

அந்நகரைச் சேர்ந்த மருத்துவர்களான மஹா சுபென், லமாய இஸ்மாயில் உள்ளிட்ட 6 பெண்களின் உடல்கள் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட இந்த உடல்கள், பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.