ஐ.எஸ் தீவரவாத அமைப்பை எதிர்த்து களமிறங்கிய குர்து இன மக்கள்

kurds_strike_001ஜேர்மனி நாட்டில் ஐ.எஸ் தீவரவாத அமைப்பை எதிர்த்து 20,000க்கும் மேற்பட்ட மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜேர்மனியின் ஹெம்பெர்க் மற்றும் செல்லி நகரில் கடந்த வாரம் இஸ்லாமியர்கள் மற்றும் குர்து இன மக்கள் இடையே நடந்த மோதலில் 20 நபர்கள் படுகாயம் அடைந்தனர்.

இதனால் சிரியா மற்றும் இராக் நாட்டில் நடந்துவரும் போரின் விளைவாக ஜேர்மனியில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், டுசல்டார்ஃப் நகரில் கடந்த சனிக்கிழமை அன்று 20,000க்கும் மேற்பட்ட குர்து இன மக்கள் இஸ்லாமிய தீவரவாத அமைப்புகளை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், குர்து மக்களுக்கு தாய் நாடாக விளங்கி வரும் சிரியா மற்றும் இராக்கில் அடைத்து வைக்கப்பட்டுள்ள குர்து மக்களுக்கு ஆதரவாக இந்த போராட்டம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.