நவீன உலகின் மிக மோசமான சுகாதார நெருக்கடி எபோலா: உலக சுகாதார அமைப்பு

ebola_virus_africa_001மேற்கு ஆப்பிரிக்காவில் பரவியுள்ள எபோலா நோய், நவீன உலகின் மிக மோசமான சுகாதார நெருக்கடி என உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் மார்கரெட் சான் கூறினார்.

பிலிப்பின்ஸ் தலைநகர் மனிலாவில் இதுகுறித்து அவர் திங்கள்கிழமை கூறியதாவது:

நவீன உலகம் சந்திக்கும் மிக மோசமான சுகாதார நெருக்கடியாக எபோலா நோய் அமைந்துள்ளது.

எபோலா நோய்த் தொற்றிலிருந்து தப்புவதற்காக, பலர் கண்மூடித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

அதனால் அவர்களுக்கு பெருமளவு பண விரயம் ஏற்படுகிறது.

எனவே, எபோலா குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு உண்டாக்குவதன் மூலம் பண விரயத்தைத் தடுக்க முடியும்.

எந்தவொரு நோயாலும் ஏற்படும் 90 சதவீத பொருளாதார இழப்பு, அந்த நோயிலிருந்து தப்புவதற்காகக் கையாளப்படும் தவறான வழிமுறைகளாலேயே ஏற்படுகிறது என்றார் மார்கரெட் சான்.

எபோலா நோய்க்கு இதுவரை 4,000 பேர் பலியாகியுள்ளனர்.