குர்து இன பத்திரிகையாளர் ஒருவரை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்ததற்கு உலக அளவில் கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குர்து இன பத்திரிகையாளரான முஹனத் அகிடியை(Muhanad Akidi Age-37) மொசூல்(Mosul) நகரில் சுற்றிவளைத்து பிணைக்கைதியாய் பிடித்து வைத்திருந்தனர்.
கடந்த 13ம் திகதி கஸ்லானி(Ghazlani) ராணுவ தளத்தில் வைத்து, அகிடி மற்றும் இரு நபர்களை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
இவர்கள் படுகொலை செய்யப்பட்டதை குர்திஷ்தான்(Kurdishtan)ஜனநாயகக் கட்சியும் உறுதி செய்துள்ளது.
மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவளிக்க அகிடி மறுத்ததால் அவர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.