மதகுருவுக்கு மரண தண்டனை
சௌதி அரேபியாவில் உள்ள ஷியா சிறுபான்மையருக்கு மேலதிக உரிமைகள் தரப்படவேண்டும் என்று கோரிய பிரபல மத குருவான, ஷேக் நிம்ர் அல் நிம்ர், அவர்களுக்கு நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
இவர் சௌதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் அமைதிக்குலைவைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தடுத்து வைக்கப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் காட்டிஃப் மாவட்டத்தில் வன்முறையைத் தூண்டியது. அவர் கைது செய்யப்பட்டபோது அவர் சுடப்பட்டு காயமுற்றார்.
நாட்டின் ஆட்சியாளர்களுக்குப் பணிய மறுத்தது மற்றும் ஆயுதமேந்தியது , சௌதி அரேபிய விவகாரங்களில் வெளிநாட்டவர் தலையீட்டை ஆதரித்தது ஆகிய குற்றங்களுக்காக அவர் தண்டிக்கப்பட்டிருப்பதாக அவரது சகோதரர் கூறுகிறார். -BBC