குண்டுமழை பொழிந்த அமெரிக்கா: நூற்றுக்கணக்கான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி

us_airstrikes_001சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்க கூட்டு படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் நூற்றுக்கணக்கான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர்.

சிரியா-ஈரக்கின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், தற்போது சிரியாவின் எல்லை பகுதியில் உள்ள கோபன் (Kobane) நகரத்தை தங்கள் வசமாக்க தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.

இதற்காக தங்களை எதிர்த்து போராடிய அப்பகுதியில் வாழும் குர்து இன மக்களில் 500 பேரை சமீபத்தில் கொடூரமாக ஐ.எஸ்.ஐ.எஸ் படுகொலை செய்துள்ளது.

இதனையடுத்து 40 சதவீத நகரத்தை கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், தங்களது கொடியையும் சிரியாவின் எல்லை பகுதியில் பறக்க விட்டனர்.

இந்நிலையில் குர்து மக்களை காப்பாற்றும் நோக்கில் அமெரிக்கா தொடர்ந்து 18 முறை சரமாரியாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றிய பகுதிகளில் குண்டுமழை பொழிந்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

தற்போது அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் ஐ.எஸ்.ஐ.எஸ் கோபன் நகரத்தை கைப்பற்றுவதிலிருந்து பின்வாங்கியதாகவும், 20 சதவீத இடம் மட்டுமே அவர்களின் வசம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.