தேர்வு எழுதினால் தலை உருளும்: ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் மிரட்டல்

iraq_children_001ஈராக்கை சேர்ந்த மாணவர்களை தேர்வு எழுதச் செல்ல அனுமதிக்காமல் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டி வருகின்றனர்.

ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தற்போது மொசூல் (Mosul) நகரை சேர்ந்த மாணவர்களை தேர்வு எழுத வேண்டாம் என ஆணையிட்டுள்ளனர்.

பள்ளி மாணவர்களும் இஸ்லாமியக் கொள்கைகளை தழுவிய மறுசீரமைப்பு பாடத் திட்டத்தை ஏற்படுத்த அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இதனால் 6 முதல் 18 வயதுக்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களை தேர்வு எழுதச் செல்ல அனுமதி மறுத்துள்ளது.

இந்நிலையில் தீவிரவாதிகளின் கண்ணில் சிக்கிய தேர்வு எழுத சென்ற சில மாணவர்களை அவர்கள் கடுமையான எச்சரித்து நகருக்குள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

மேலும் தங்களது கட்டளையையும் மீறி எவரேனும் தேர்வு எழுத சென்றால் அவர்களுக்கு மரண தண்டனை நிச்சயம் என அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாணவர் ஒருவர் கூறுகையில், தீவிராவதிகளின் தாக்குதலுக்கிடையேயும் நாங்கள் மிகுந்த சிரமப்பட்டு படித்தோம் என்றும் ஆனால் இவ்வாறு எங்களை தேர்வு எழுத விடாமல் செய்வது எங்களது கனவை பாழாக்குவது போல் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.