யுத்தக் குற்றங்களைப் புரிந்த நாடுகளைக் காப்பாற்ற ஐ.நாவில் வீட்டோ அதிகாரம் பயன்படுகிறது – சர்வதேச மன்னிப்புச்சபை

amnesty-international-logoயுத்தக்குற்றம் உள்ளிட்ட பாரிய மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களை புரிந்த நாடுகளை காப்பாற்றுவதற்காக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது.

இந்தநிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த, பாதுகாப்பு சபையின் நிரந்தரமல்லாத அங்கத்துவத்தைப் பெற்றுள்ள நியுலாந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக்கு புதிதாக ஐந்து நிரந்தரமற்ற அங்கத்துக நாடுகள் இணைத்துக் கொள்ளப்பட்டன.
இதில் நியுசிலாந்தும் புதிதாக இணைந்துள்ளது.

சிரியா, சிறிலங்கா போன்ற நாடுகளின் பாரிய யுத்தக்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை போதிய அளவில் செயற்பட்டிருக்கவில்லை.

சிறிலங்காவின் யுத்தக் குற்றம் தொடர்பில் பாதுகாப்பு சபை எந்த நடவடிக்கையையும் மேற்கொண்டதில்லை.

இந்த நிலையில் புதிதாக அங்கத்துவம் பெற்றுள்ள நியுசிலாந்து, சிறிலங்காவின் யுத்தக் குற்றங்களை பாதுகாப்பு சபையில் முன்வைத்து, தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மன்னிப்பு சபையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.