உக்ரைனின் தன்னாட்சிப்பகுதியாக இருந்து வந்த கிரிமியா, ரஷியாவுடன் இணைந்ததை தொடர்ந்து கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சுயாட்சி கோரி ஆயுதங்களை கையில் எடுத்தனர். உக்ரைன் படையினருடன் அவர்கள் போரிட்டு, டன்ட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய இரு மாகாணங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அவற்றை உக்ரைன் படையினரால் மீட்க முடிய வில்லை.
இரு தரப்புக்கும் இடையே நடந்த 5 மாத சண்டையில் 3,500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொண்டனர்.இந்த நிலையில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வரும் டன்ட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய 2 மாகாணங்களுக்கும் தனி அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டத்துக்கு உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷெங்கோ நேற்று ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். இதன்படி, இரு மாகாணங்களுக்கும் சுயாட்சி வழங்கப்படுகிறது. இந்த சட்டம் 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இரு மாகாணங்களிலும் டிசம்பர் 7-ந் தேதி தேர்தல் நடத்தப்படும்.
இந்த மாதிரியான நல்ல முயற்சிகள் எதுவும் தமிழ் ஈழத்தில் உருவாக சாத்தியமற்றதாக இருக்கிறதே.