ஈராக்கில் மாணவர்களை தேர்வு எழுதச் செல்லவிடாமல் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டி வருகின்றனர்.
ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்கியுள்ளனர்.
ஈராக்கின் மிகப்பெரிய நகரமான மொசூலை கைப்பற்றியுள்ள தீவிரவாதிகள், அங்குள்ள மக்களை இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
மீறுபவர்களுக்கு கொடூரமான தண்டனைகள் வழங்கப்படுகிறது, மேலும் மாணவர்களுக்கும் இஸ்லாமிய கொள்கைகள் தழுவிய மறுசீரமைப்பு பாடத் திட்டத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் 6 முதல் 18 வயதுக்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களை தேர்வு எழுதச்செல்ல விடாமல் தடுத்து வருகின்றனர்.
இந்த விதியை மீறும் பட்சத்தில், மரண தண்டனை நிச்சயம் என ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து மாணவர் மைசூன் முஹம்மது கூறுகையில், ஐ.எஸ்.ஐ.எஸ் எங்களது கனவை நாசமாக்கிவிட்டது, ஏற்கனவே நாங்கள் தாக்குதலுக்கு மத்தியில் பாடம் படித்து மன உளைச்சலில் உள்ளோம்.
எங்களது பள்ளி பருவம் வீணாகிப் போனதுடன், இனிமேலும் படிக்க முடியும் என்ற நம்பிக்கையும் போனது என தெரிவித்துள்ளார்.-http://world.lankasri.com
இந்த பூமியை அழிக்க வந்த எமன்கள்.
நம்பிட்டோம்