கடந்த ஆண்டு சீனாவில் 2,400 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகில் மிக அதிக அளவு மரண தண்டனை நிறைவேற்றப்படும் சீனாவில், அது குறித்த தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்படுகின்றன.
எனினும், “துய் ஹுவா அறக்கட்டளை’ என்ற அந்த அமைப்பு இது தொடர்பாக புள்ளிவிவரங்களைக் கண்டறிந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சீனாவில் கடந்த 2013-ஆம் ஆண்டில் 2,400 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் இது முந்தைய ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளைவிட 20 சதவீதம் குறைவுதான்.
2002-ஆம் ஆண்டில்தான் சீனாவில் மிக அதிக அளவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அந்த ஆண்டு 12,000 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மரண தண்டனை குறித்த விமர்சனங்களை சீனா மறுத்து வந்தாலும், பிற நாடுகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக நிறைவேற்றும் மரண தண்டனைகளைவிட அதிகமாக சீனா மரண தண்டனைகளை நிறைவேற்றி வருகிறது.
2013-ஆம் ஆண்டின் உலகின் பிற நாடுகள் அனைத்தும் நிறைவேற்றிய மரண தண்டனைகளின் மொத்த எண்ணிக்கை 778 என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு கம்யூனிஸ்ட் நாடு என்று பீற்றிக்கொள்ளும் சீன தேசத்திற்கு குற்றவாளிகள் பிறப்பதில்லை ; உருவாக்கப்படுகிறார்கள் எனும் உண்மை தெரிந்தும் தெரியாதவர்களைப் போல் குற்றவாளிகளைக் கொலை செய்கிறார்கள்.(மரண தண்டனை என்று சொல்லக்கூடாது. ஏன் என்றால் தண்டனை என்பது தண்டிப்பது. அந்த தண்டிப்பின் வாயிலாக தன் குற்றத்தை உணர்ந்து ஒருவன் திருந்தி வாழ வாய்ப்பினை ஏற்படுத்தித்தருவதுதான் தண்டனை. மரணத்தில் அதற்கான வாய்ப்பே இல்லாத போது எப்படி தண்டனையாகும். அது காவல்துறை சட்டத்தைக் காட்டிச் செய்யும் பாதகமான பச்சைக் கொலைச் செயலாகும். அரசின் கையாலாகாத்தனம்.)
ஒரு நாட்டில் நடைபெறும் எந்தக் குற்றச் செயலை எடுத்துக்கொண்டாலும் அதற்கு அடிப்படை குற்றச் செயலுக்கான ஊக்கிகள் சமுதாயத்தில் நிரம்பி இருக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசாங்கங்களே காரணமாக இருக்கின்றன. மதுபானம்,ஆபாசப் படங்கள், ஆபாசக் கதைப் புத்தகங்கள், வேலைவாய்பின்மை அல்லது வேலைவாய்ப்பில் இன பாகுபாடு, வியாபார வாய்ப்புகளில், உயர்கல்வியில், தொழிற்கல்வியில் இன பாகுபாடு, அனுமதிக்கப்பட்ட சூதாடங்கள், விபச்சாரங்கள் என்பதோடு லஞ்சம் எனும் கையூட்டு, சொத்துகளை அபகரித்தல், ஏழைகளைச் சுரண்டும் பெரியப் பெரிய காப்பிரேட் நிறுவனங்களை உலகமயம் எனும் பெயரில் அனுமதித்தல், உழைப்பவனுக்குப் நியாயமான ஊதியம் கிடைக்கச் செய்யாமல் சட்டங்கள் வாயிலாக கட்டுப்படுத்துதல், ஏழை விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களின் விலையை உற்பத்தி செய்யும் விவசாயிகள் நிர்ணயம் செய்யும் உரிமையை அரசு தன் கைகளில் பலவந்தமாகச் சட்டங்கள் இயற்றி கைப்பற்றிக்கொள்ளுதல் , சிறு வியாபாரிகளை ஆதிக்க சக்திகள் வாட்டி வதைக்க இடமளிப்பது போன்ற எண்னற்ற பாதங்களுக்கு இடமளித்து சமூகம் சீரழிய காரணமாயிருக்கும் அரசே குற்றவாளிகளை உற்பத்தி செய்துவிட்டு கெபிட்டல் செண்டஸை மரணதண்டனை எனும் பெயரில் குற்றவாளிகளுக்குக் கொடுப்பது கொடுமையிலும் கொடுமை!