ஐ.எஸ்.ஐ.எஸ் வசமுள்ள எண்ணெய் கிணறுகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈராக்கை ஒட்டிய சிரியாவின் எல்லைப்புற மாகாணமான தீர் எல்-ஸரில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சிரியா மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் தாக்குதல்கள் குறித்து அந்த அமைப்பு கூறுகையில், தீர் எல்-ஸரிலுள்ள ஜாஃப்ரா எண்ணெய்க் கிணறுகளில் கூட்டுப் படை நேற்று முன்தினம் தாக்குதல் நிகழ்த்தியது.
அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் ஒரு மாதத்துக்கு முன்பாக சிரியாவில் தொடங்கிய வான்வழித் தாக்குதலில் இதுவரை 553 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 464 பேர் ஐ.எஸ் தீவிரவாதிகள், 57 பேர் அல்கொய்தாவோடு தொடர்புடைய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், எஞ்சிய 32 பேர் பொதுமக்கள் என்று தெரிவித்துள்ளது.
மேலும் ஜாஃப்ரா எண்ணெய்க் கிணறுகளில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதை உள்ளூர் ஒருங்கிணைப்புக் குழுக்களும் நேற்று உறுதி செய்துள்ளன.
அதான் அமெரிக்க காரனின் வேலை என்று உலகத்துக்கே தெரியுமே ……….. தனக்கு ஆதாயம் இல்லாத எதையும் அவன் செய்ய மாட்டான் என்று ……