ஈராக்–சிரியாவில் ரசாயன குண்டுகளை வீசி ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்

isis_irakஈராக் மற்றும் சிரியாவில் ரசாயன குண்டுகளை வீசி ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர்.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை தகர்க்க அவர்கள் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறும் தீவிரவாதிகள் அங்கு ரசாயன குண்டுகளை வீசுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஈராக்கில் கடந்த செப்டம்பர் 11–ந்தேதி துலுயாநகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் குண்டு வீச்சில் போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் குளோரின் வாயு தாக்குதலால் ஏற்பட்ட காயம் என தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தீவிரவாதிகள் ரசாயன குண்டு வீசியது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை குற்றம் சாட்டியுள்ளது.

அதே போன்று மேலும் 2 தாக்குதல்களின் போது குளோரின் வாயு குண்டுகளை தீவிரவாதிகள் வீசியதாக ஈராக் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ஈராக்கின் பாக்தாத் நகரை ஐ.எஸ்.., தீவிரவாதிகளால் நெருங்க முடியவில்லை. அவர்களுக்கு எதிராக அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் தொடர்ந்து குண்டு மழை பொழிகின்றன.

பாக்தாத் அருகே ஜாத்ப் அல்–சகார் என்ற நகரம் தீவிரவாதிகள் கட்டுபாட்டில் இருந்தது. தற்போது இதன் பெரும்பகுதியை அமெரிக்கா உதவியுடன் ஈராக் ராணுவம் மீட்டுள்ளது. இதனால் தீவிரவாதிகளால் தொடர்ந்து முன்னேற முடியாமல் அவர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. -http://www.maalaimalar.com