சிரியாவில் முகாமிட்டுள்ள ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதிகளுக்கு கத்தார் நிதி உதவி வழங்கி வருவதாக வெளியான செய்தியை அந்நாட்டு அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து அவர்கள் கூறும் போது சட்ட திட்டங்களுக்குட்பட்டு செயல்படும் போராளிகளுக்கு மட்டுமே கத்தார் ஒத்துழைப்பு வழங்கிவருவதாக தெரிவித்தனர். இந்த நிதி உதவி அமெரிக்க மத்திய புலனாய்வு, மேற்கத்திய மற்றும் அராபிய புலனாய்வு பிரிவினரின் ஒத்துழைப்புடன் வழங்கப்படுகிறது. நிதி உதவி அளிப்பதற்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்றும் கூறியுள்ளனர்.

























