15,000 அயல்நாட்டு ஜிகாதிகள்: விஸ்வரூபம் எடுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்

15,000_jihadist_001ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் மொத்தம் 15,000 வெளிநாட்டு ஜிகாதிகள் இருப்பதாக ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், தங்களது அமைப்பில் ஆள் சேர்ப்பதில் தீவிரமாய் இருந்து வருகிறது.

இதுகுறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.எஸ்.ஐ.எஸ்-யுடன் போராட வேண்டும் என விரும்பி தற்போது 80க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பலர் இணைய முயன்றுள்ளனர்.

குறிப்பாக பிரான்ஸ், ரஷ்யா, மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து தீவிரவாத இயத்திற்கு அதிகமான ஆட்கள் எடுக்கபட்டுள்ளனர்.

இதுவரை மொத்தம் 15,000 வெளிநாட்டினரை கொண்ட இந்த அமைப்பில் கடந்த யூன் மாதம் முதல் செப்டம்பர் வரையில் மட்டும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,000 பேர் இணைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆள்சேர்ப்பு பணியை டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களின் மூலம் தீவிரவாதிகள் மேற்கொள்வதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.