ஐ.எஸ்.ஐ.எஸ்-யால் சீரழிக்கப்பட்ட தருணங்கள்…19 வயது சிறுமியின் கண்ணீர் பேட்டி

yazidi_girl_001யாஸிதி இனத்தை சேர்ந்த 19 வயது சிறுமி ஒருவர் தான் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் சந்தித்த கொடுமைகளை பற்றி அளித்த பேட்டி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், ஈராக்கின் சின்ச்சார்(Sinjar)மலைப்பகுதிகளில் வாழும் சிறுபான்மையினத்தவரான யாஸிதி மக்களை கடத்தி சென்று துன்புறுத்தி வருகின்றனர்.

இதை பற்றி யாஸிதி இனத்தை சேர்ந்த ஜனா(19) என்ற சிறுமி கூறியதாவது, கடந்த ஆகஸ்ட் மாதம் நாங்கள் வாழும் பகுதியை கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், எங்கள் இன மக்கள் Isis sells women-being-sold-in-Mosulஅனைவரையும் கடத்தி சென்றனர்.

இதன்பின் ஆண்கள், பெண்கள் மற்றும் முதியவர்களை தனித்தனி முகாம்களில் அடைத்து வைத்து மதம் மாற வேண்டும் என கட்டாயப்படுத்தியதுடன், சிலரை கொலையும் செய்துள்ளனர்.

என்னை நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளுடன் தங்க வைத்தனர். மேலும் நினைக்கும் நேரத்தில் எல்லாம் தீவிரவாதிகள், நாங்கள் தங்கியிருந்த முகாமிற்கு வந்து மூன்று அல்லது நான்கு பெண்களை தெரிவு செய்து அழைத்து சென்று விடுவர்.

அப்பெண்களை வற்புறுத்தி கற்பழித்துவிட்டு, பிறகு மொசூல்(Mosul), ரக்கா(Raqqa) உள்ளிட்ட நகரங்களின் விபச்சார சந்தைகளில் ஆடு, மாடுகளை விற்பனை செய்வது போல் விலைபேசி விற்றுவிடுவர்.

அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களில் நானும் ஒருவள் என்றும், மருத்துவர் ஆகவேண்டும் என்ற எனது கனவு மாயமாகிவிட்டது எனவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். -http://world.lankasri.com