காங்கோ நாட்டில் தீவிரவாதியை கல்லால் அடித்து கொன்று, தின்ற கும்பல்

kongoபெனி, நவ.1– ஆப்பிரிக்காவில் காங்கோ நாடு உள்ளது. அங்கு ‘எ.டி.எப். நலு’ என்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக செயல் பட்டு வருகின்றனர். பொது மக்களுக்கு எதிராக கொடுஞ்செயல் புரிந்து அவர்களை கொன்று குவித்து வருகின்றனர்.

சமீபத்தில் கம்பியா சூ என்ற கிராமத்தில் புகுநது 14 பேரை கொன்றனர். கடந்த அக்டோபரில் மட்டும் 107 பேரை கொன்று குவித்துள்ளனர். இதனால் அவர்கள் மீது பொதுமக்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று பெனிநகரில் பொதுமக்கள் ஒரு பஸ்சில் பயணம் செய்தனர். அவர்களில் சந்தேகப்படும் நிலையில் ஒருநபர் பயணம் செய்தார். அவர் ஒரு தீவிரவாதி என பயணிகள் சந்தேகப்பட்டனர்.

அவரிடம் ‘ஸ்வாகிலா மொழியில் பல கேள்விகளை கேட்டனர். அவனால் அதற்கு பதில் சொல்ல தெரிய வில்லை. எனவே அவன் தீவிரவாத குழுவை சேர்ந்தவன் என முடிவு செய்தனர்.

பின்னர் கும்பலாக சேர்ந்து அந்த நபரை பஸ்சில் இருந்து ‘தரதர’வென வெளியே இழுத்து வந்தனர். பின்னர் அவரை கல்லால் அடித்து கொன்றனர்.

அத்துடன் அவர்களது ஆத்திரம் தீரவில்லை. அவரது உடலை தீவைத்து எரித்தனர். பிறகு அவரது உடலின் சில பாகங்களை தின்றனர். இச்சம்பவம் மிகவும் கொடூரமாக இருந்தது.

இதற்கிடையே, அடித்து கொல்லப்பட்ட நபர் ஜோசப் கபிலா என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தீவிரவாதியா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.