கடத்தப்பட்ட நைஜீரிய மாணவிகளை கல்யாணம் கட்டிய தீவிரவாதிகள்: பரபரப்பு தகவல்

boko_haram_abducted_girlsநைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளுக்கு, தீவிரவாதிகளுடன் திருமணம் நடக்கப்போகிறது என்று போகோ ஹரம் தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிபோக் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிக்கூட மாணவிகளை போகோ ஹரம் தீவிரவாதிகள் கடத்திச்சென்றனர்.

இதில் சிலர் தப்பி வந்த நிலையில் தற்போது 219 மாணவிகள் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி உள்ளனர்.

இதற்கிடையே கடந்த மாதம் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தீவிரவாதிகள் போர் நிறுத்தத்திற்கு சம்மதித்து இருப்பதாக நைஜீரிய அரசு தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் தீவிரவாதிகள் புதிய காணொளி ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில் தீவிரவாதிகளின் தலைவர் ஒருவர் தோன்றி, ‘நாங்கள் அரசுடன் உடன்பாடு மேற்கொள்ளவில்லை, போர் நிறுத்தம் செய்ததாக கூறுவதில் உண்மை இல்லை.

எங்களது தாக்குதல் தொடரும், கடத்தப்பட்ட மாணவிகளில் பெரும்பாலானவர்களை மதமாற்றம் செய்து விட்டோம். நாங்கள் அவர்களை திருமணம் செய்து கொண்டோம். அவர்கள் எங்கள் வீடுகளில் வசிக்கிறார்கள்’ என்று தெரிவித்து உள்ளார்.

தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள இந்த புதிய காணொளியால் நைஜீரியாவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=OKgJFPAbtJ0