ஈராக்கில் 50 பழங்குடியின மக்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
சிரியா, ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் முக்கிய நகரங்களை பிடித்து வைத்திருக்கின்றனர்.
அத்துடன் பல எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளனர். கடத்தல் கச்சா எண்ணெய் விற்பனை மூலம்தான் ஐ.எஸ். தீவிரவாதிகள் இப்போது ஈராக்கிலும், சிரியாவிலும் அமெரிக்க தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடூரம் மேலும் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.
ஈராக்கின் அன்பார் மாகாணத்தில் 50 மேற்பட்ட பழங்குடியின மக்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இதில் பெண்களும் அடங்குவர்.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த கொடூர தாக்குதலில் 86 பேர் பலியாகினர் என்று மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
மாகாணத்தின் ராஸ் அல்-மா கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
தற்போது பழங்குடியின மக்கள் வசித்தப் பகுதியை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. -http://world.lankasri.com