போராளிகள் மீது குண்டு வீச்சு: இராணுவத்தின் அட்டூழியம்

barrel_bomb_001சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டு அரசு படைகள் போராளிகள் மீது பேரல் குண்டுகளை வீசி கொன்று குவித்து வருகின்றனர்.

சிரியாவின் ஜனாதிபதி அல் ஆசாத்திற்கு எதிராக அந்நாட்டு மக்கள், கடந்த 2011ம் ஆண்டு தொடங்கிய போராட்டம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தற்போது சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் ஆதிக்கம் ஓங்கியுள்ளதை பயன்படுத்திக்கொண்ட சிரிய இராணுவம், பேரல் குண்டுகளை போராளிகள் வசிக்கும் பகுதிகளில் வீசியுள்ளது.

மேலும் எண்ணெய் பேரல், காஸ் சிலிண்டர் போன்றவற்றில் வெடி குண்டுகள், ஆணி உள்ளிட்ட பொருட்களை நிரப்பி ஏராளமான மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த பேரல் குண்டு தாக்குதலுக்கு, கடந்த மாதம் 20ம் திகதி முதல் இதுவரை, 232 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.