பின்லேடனை கொன்றது நான் தான்! வெளி உலகத்துக்கு வந்த ஹீரோ

osama_killer_001அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை கொன்ற நபர், முதன்முறையாக வெளி உலகத்துக்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டில் பாகிஸ்தானின் அபோதாபாத்தில்(Abbottabad) உள்ள ரகசிய வீட்டில் பதுங்கி வாழ்ந்து வந்த பின்லேடனை அமெரிக்க ராணுவத்தினர் வீடு புகுந்து தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றனர்.

இதன்பின் பின்லேடனை கடலில் வீசி சமாதி கட்டியதாக அமெரிக்கா அறிவித்தது. ஆனால் இதுவரை பின்லேடனை கொன்ற நபர் யார் என்ற விவரத்தையும், யாரெல்லாம் அந்த தாக்குதலில் ஈடுபட்டனர் என்பதையும் அமெரிக்கா வெளியிடவில்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பின்லேடனை நேருக்கு நேர் சுட்டுக் கொன்ற வீரர் தனது அடையாளத்தை வெளி உலகத்துக்கு காட்டுவுள்ளதாக அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.

தற்போது அவர் வெளியுலகத்துக்கு வெட்டவெளிச்சமாகியுள்ளார். அவரின் பெயர் ராப் ஓ நீல்(Rob O’Neill Age-38). பின்லேடனை மிக அருகில் பார்த்த ராப், அவரின் தலையில் 3 முறை சுட்டது தெரியவந்துள்ளது.

மேலும் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானின் போர் பகுதிகளில் கலந்து கொண்ட ராப், இதுவரை 400க்கும் மேற்பட்ட போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் தற்போது பின்லேடனின் படுகொலை குறித்து, இவர் பொது இடங்களில் பேசுவது கிடையாது.

இதற்கிடையே இவரது வீரச்செயலுக்கு, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.