ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும், குர்திஷ் படையினருக்கும் இடையே நடக்கும் தாக்குதலில் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், தற்போது சிரியாவின் எல்லைப் பகுதியில் உள்ள கோபேனி(Kobani) நகரை கைப்பற்ற திட்டமிட்டது.
ஆனால் இவர்களை தடுத்து நிறுத்த அப்பகுதியில் வாழும் குர்திஷ் படையினர், கடந்த 50 நாட்களாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலில் இதுவரை 1,013 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இறந்தவர்களில் 609 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் 363 பேர் குர்திஷ் மக்கள் எனவும் மனித உரிமை அமைப்பின் இயக்குநர் ரமி அப்துல் ரஹ்மான்(Rami Abdul Rehman) கூறியுள்ளார். -http://world.lankasri.com































