ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதி இறக்கவில்லை என்பதற்கு ஆதாரமாக அவர் பேசிய ஓடியோ டேப் வெளியிடப்பட்டுள்ளது.
ஈராக்கின் மொசுல் நகரில் கடந்த 7ம் திகதி இரவு நடந்த தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி படுகாயம் அடைந்ததாக தகவல்கள் வெளியானது.
ஆனால் சனிக்கிழமையன்று, அல் கைம் நகரில் நடந்த தாக்குதலில் தான் பாக்தாதி படுகாயம் அடைந்தார் என்று ஈராக் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அவர் இறந்துவிட்டதாக சிலரும், எங்கோ உயிருடன் இருக்க வேண்டும் என்று சிலரும் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் பாக்தாதி பேசும் ஓடியோ ஒன்றை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு நேற்று வெளியிட்டுள்ளது.
17 நிமிடங்கள் ஓடும் அந்த ஓடியோவில், ஐ.எஸ். போராளிகள் இறுதி வரை போராடுவார்கள். அமைப்பில் ஒரேயொரு வீரர் மிச்சம் இருந்தாலும் தொடர்ந்து போராடுவார்கள் என்று பாக்தாதி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஓடியோ உண்மையானது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவர் உயிருடன் தான் உள்ளார் என்பதை உலகிற்கு அறிவித்துள்ளனர்.
நீங்கள் சொல்வதுபோல், எல்லாம் வல்ல இயற்கையின் அருளால், கடைசியில் உங்களின் ஒரே ஒரு போராளிமட்டும் வீரத்துடன் போராடும் நிலை விரைவில் ஏற்படவேண்டும். அதுவே, தலைகள் துண்டிக்கப்பட்டு பிண்டங்கள் சிதறும் கடும் காட்டுமிராண்டித் தனம் நின்று, உங்கள் IS-ன் இரத்தக்கறை படிந்த கொடூரக் கதைக்கு இறுதி வாக்கியத்தின் நிலையான முற்றுப்புள்ளியாகட்டும்.