நீரில் மூழ்குவதால் ஏற்படும் உயிரிழப்புகளை எளிதில் தடுக்க முடியும்

biharஆட்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பதைத் தடுக்க உலகளாவிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

மக்கள் நீரில் மூழ்கி உயிர்விடுவதை பெருமளவில் தடுக்க முடியும் என்றாலும், உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் பேர் நிரில் மூழ்கி உயிரிழக்கிறார்கள் என்றும் அவ்வகையான உயிரிழப்புகள் பொது சுகாதாரத்துக்கான ஒரு பெரிய சவாலாக இருந்துவருகின்றன என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

சிறார்களின் உயிரிழப்பில் முதல் பத்து காரணிகளில் ஒன்றாக நீரில் மூழ்குதல் அமைந்துள்ளது.

நீர் நிலைகளைச் சுற்றி தடுப்பு சுவர் அமைப்பது,பிள்ளைகளுக்கு அடிப்படையான நீச்சல் சொல்லிக்கொடுப்பது போன்றவற்றின் மூலம் இந்த உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என உலக சுகாதார நிறுவனம் வாதிடுகிறது. -BBC