இஸ்லாமியவாத தீவிரவாதக் குழுவான போக்கோ ஹராமின் தாக்குதல்களில் இருந்து வடக்கு நைஜீரியாவில் வசிக்கும் மக்கள் தாமே தம்மை பாதுகாத்துக்கொள்ள முன்வர வேண்டும் என்று அங்கு மிகவும் செல்வாக்குப் பெற்ற பாரம்பரிய தலைவர் கூறியுள்ளார்.
நைஜீரிய மத்திய வங்கியின் ஆளுனராக இந்த வருட முற்பகுதி வரை பணியாற்றிய கானுவுக்கான எமிரான முஹமட் சனுசி அவர்கள், பாதுகாப்புப் படை வந்து தம்மைக் காக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
தமது சொந்த கிராமத்தையும் நகரையும் பாதுகாக்க் அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
பொதுமக்களை ஆயுதந்தரிக்கக் கோரும் எந்தவொரு அழைப்பும் அராஜகத்துக்கும், சட்ட ஒழுங்கற்ற நிலைக்குமே வழி செய்யும் என்று கூறியுள்ள பொலிஸ் தரப்பு பேச்சாளர் ஒருவர், அதனை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். -BBC