உறையும் உயிர்கள்: பரிதாப வாழ்க்கையில் உக்ரைன் மக்கள்

underground_life_001உக்ரைன் நாட்டில் கடுங்குளிர் நிலவுவதால் அந்நாட்டு மக்கள் நிலத்தடியில் வீடு அமைத்து குடித்தனம் நடத்த தொடங்கியுள்ளனர்.

உக்ரைனை கைப்பற்ற ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, அந்நாட்டில் நிலவும் கடுமையான குளிரைத்தான் அங்குள்ள மக்களால் தாக்குப் பிடிக்க முடியாமல் உள்ளனர்.

இதனால் இங்கு வாழும் பலரது உடலின் வெப்பநிலை கணிசமாக குறைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த கடுங்குளிரில் சிக்கி கடந்த ஆண்டுகளில் நூற்றுக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

எனவே முன்னெச்சரிக்கையாக இந்தாண்டு கிழக்கு உக்ரைனில் கடும் குளிர் வீசி வரும் பகுதியான டோனெட்ஸில் (Tonetsil)வாழ்ந்து வரும் பலர், தங்களது குடியிருப்புகளை நிலத்திற்கு அடியில் மாற்றிக் கொண்டுள்ளனர்.

தற்போது இங்கேயே சமைத்துச் சாப்பிட்டு, தூங்குவதுடன், தேவை ஏற்பட்டால் மட்டுமே வெளியே வருகின்றனர்.

இதற்கிடையே குளிருக்கு மட்டுமின்றி கிளர்ச்சியாளர்களிடமிருந்து தப்பிப்பதற்காக இதுபோல வீடுகளை இந்த மக்கள் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. -http://world.lankasri.com