ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் குண்டுகளை தயாரிக்க பயன்படுத்திய தொழிற்சாலை கட்டிடம் ஒன்றின் மீது கனடிய யுத்த விமானங்கள் குண்டுவீச்சினை மேற்கொண்டுள்ளன.
ஈராக்கின் வட பகுதியில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை மீது கனேடிய போர் விமானங்களுடன், ஏனைய கூட்டணி நாடுகளின் விமானங்களும் இணைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
கனடாவின் CF-18 வகை போர் விமானங்கள் நான்கு குறித்த அந்த இலக்கின் மீது எட்டு குண்டுகளை துல்லியமாக வீசியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் அந்த ஆயுத தொழிற்சாலை தரைமட்டமானதாகவும், நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் இறந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஈராக்கிய படையினர் மீது தாக்குதலை நடத்துவதற்கான கண்ணிவெடிகள், வீதியோர குண்டுகள், பொறி வெடிகள் போன்றவற்றை தயாரிப்பதற்கு அந்த தொழிற்சாலை பயன்பட்டு வந்ததாக தெரிகிறது. -http://world.lankasri.com