அமெரிக்காவின் டொலர் மதிப்பை குறைத்து அந்நாட்டை வீழ்த்த, ரஷ்ய ஜனாதிபதி புதின் பெருமளவில் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்.
உக்ரைனின் கைப்பற்றி தனது ஆதிக்கத்தை செலுத்த விரும்பும் புதினை அமெரிக்கா கடுமையாக கண்டித்து வந்துள்ளது.
மேலும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்த நிலையில், அமெரிக்காவோ தனது நட்பு நாடான சவுதி அரேபியாவிடம் பேசி, கச்சா எண்ணை விலையை மளமளவென குறைத்துள்ளது.
இதனால் கச்சா எண்ணைக்கான சர்வதேச தேவை ரஷ்யாவில் குறைந்தது, அந்நாட்டின் ஜனாதிபதி புதினை கடுங்கோபத்தில் ஆழ்த்தியது.
எனவே தற்போது அமெரிக்காவில் சரிவை ஏற்படுத்தும் விதமாக, ரஷ்யாவில் பெருமளவுக்கு தங்கம் வாங்கப்பட்டு வருகிறது.
இதனால் அமெரிக்க டொலர் பத்திரங்களில் முதலீடு குறைந்து டொலரின் மதிப்பு வீழ்ச்சியடைவதுடன், அமெரிக்காவை தடுமாறச் செய்து பழிதீர்க்க புதின் திட்டமிட்டுள்ளார்.
புத்தின் தப்புக் கணக்கு போட்டு விட்டார். ஆசிய நேரத்தில் குறுகிய கால வரையறைக்குள் பங்குச் சந்தையில் தங்க பரிவர்த்தனை அதிக அளவில் நடப்பதை அமெரிக்கர்கள் அறியாமல் இல்லை. உலக அளவில் இரசியா தனிமரமாக்கப் பட்டு விட்டது. பொருளாதாரத்தில் இரசியாவின் வலிமை, அமெரிக்க ஐரோப்பிய ஜப்பான் கூட்டணியை வெற்றிக் கொள்ள முடியாது என்பதை புத்தின் ஆலோசகர்கள் அறிவுறுத்தவில்லையா? அல்ல அவர் தாந்தோனித்தனமாகச் செயல்படுகின்றாரா என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் இவர்களின் போட்டா போட்டியை.
சபாஷ் சரியான போட்டி! இல்லையேல் இன்று நமக்கு எண்ணை விலை குறைய வாய்ப்பிருக்காது.ரஷ்ய சீனா வாணிப ஒப்பந்தம்,BRICS வங்கி செயலாக்கம் உலக நாடுகளுக்கு நன்மை பயக்கும்.