பாகிஸ்தானில் ஹிந்துக் கோயிலுக்கு மர்ம நபர்கள் தீவைப்பு

pakistan1பாகிஸ்தானிலுள்ள ஹிந்துக் கோயில் ஒன்றுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில், சிலை ஒன்றும், புனித நூல்களும் எரிந்து நாசமாயின.

அந்த நாட்டின் ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்தச் சம்பவத்துக்கு, அங்குள்ள ஹிந்து சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் ஹிந்து கவுன்சில் தலைவர் ரமேஷ் வாங்வானி கூறியதாவது:

கோயிலுக்குத் தீ வைத்தவர்கள் யாரென்ற விவரம் தெரியவில்லை.

எனினும், தீ வைத்துவிட்டு நான்கு பேர் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நாங்கள் அளித்த புகாரை ஏற்று, அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிரான வழக்கை போலீஸார் பதிவு செய்துள்ளனர் என்றார் அவர்.

எனினும், காவல்துறை அதிகாரி நஸீம் ஆரா கூறுகையில், “”சிலை வைப்பதற்கான ஒரு ஒரு மேடைதான் எரிக்கப்பட்டுள்ளது, அதனை கோயில் என்று சொல்வது பொருத்தமாக இருக்காது” என்றார்.

“”இந்த ஆண்டுத் தொடக்கத்தில் ஹிந்துக் கோயில்களுக்குத் தீ வைக்கும் சம்பவங்கள் நடைபெற்றதையடுத்து, அந்த இடத்தைச் சுற்றிச் சுவர் எழுப்பவும், சிலைகள், புனித நூல்களை அங்கு வைக்க வேண்டாம் எனவும் நாங்கள் வலியுறுத்தி வந்தோம்.

எனினும், கோயில் நிர்வாகிகள் அதனை அலட்சியப் படுத்திவிட்டனர்” என்று அவர் தெரிவித்தார். -http://www.dinamani.com