நைஜீரியாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 60 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நைஜீரியாவில் தனி நாடு கோரி போராடும் நடத்தும் போகோஹரம் தீவிரவாதிகள் பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் மெய்டுகுரி (Maiduguri) மற்றும் அபூஜா (Abuja) என்ற இடங்களில் உள்ள சந்தைகளில் இரு பெண்கள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்புகளில் குறைந்தது 60 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் இராணுவமும், பொலிசாரும் சம்பவ இடத்தை விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேர்க்கவில்லை என்றாலும் போகோஹரம் தீவிரவாதிகள் மீது பொலிசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கிடையே நேற்று டமாசாக் (Damaasak) என்ற நகரை போகோஹரம் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது. -http://world.lankasri.com