பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கச் சென்ற 3 பெண்கள் உள்ளிட்ட 4 மருத்துவப் பணியாளர்கள் தலிபான் பயங்கரவாதிகளால் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தங்கள் வீடுகளிலிருந்து மருத்துவ மையம் ஒன்றுக்கு குவெட்டா நகர புறவழிச் சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது அவர்கள் சுடப்பட்டனர்.
போலியோ தடுப்பு மருந்தால் இஸ்லாமியர்களின் இன விருத்தி பாதிக்கும் எனக் கூறி, பயங்கரவாதிகள் அதற்குத் தடை விதித்துள்ளனர். -http://www.dinamani.com