சீனாவின் லியாவ்னிங் மாகாணத்தில், நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் புதன்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.
அந்தப் பகுதியில் ஏற்பட்ட 1.6 ரிக்டர் அளவிலான, லேசான நில நடுக்கத்தைத் தொடர்ந்து, இந்தத் தீ விபத்து நேரிட்டது.
மீட்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், ஆபத்தான நிலையில் பலர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுரங்க நிர்வாகம் தெரிவித்தது.
நில நடுக்கத்தைத் தொடர்ந்து, தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். -http://www.dinamani.com