பாகிஸ்தானில் ஐ.எஸ்.: முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை

isis_irakபாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தொடர்பு ஏற்படுத்தியுள்ளதாக அந்த நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தானின் தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்பினருடன், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

இதற்கான வலுவான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை இன்னும் இரு தினங்களில் வெளியிடுவேன்.

விரைவில், தலிபான் தலைவர்களில் ஒருவர் பாகிஸ்தானுக்கான ஐ.எஸ். தலைவராக அறிவிக்கப்படலாம்.

பாகிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் பரவியதைப் போல, ஐ.எஸ். அமைப்பின் ஆதிக்கமும் பரவி, நாட்டில் நிலவி வரும் வன்முறைச் சம்பவங்கள் அடுத்த கட்டத்தை அடையும்.

ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்த எனது எச்சரிக்கையை அரசு அலட்சியப்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது என்று ரஹ்மான் மாலிக் கூறியதாக, பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் “டான்’ நாளிதழ் தெரிவித்துள்ளது. -http://www.dinamani.com