7,000 பேரின் உயிரை பறித்த எபோலா! திடுக் தகவல்

ebola_virus_africa_001எபோலா நோயால் இதுவரை 6,928 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று எபோலா.

இந்நோயை தடுக்க உலக சுகாதார நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இதனால் பலியான நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றது.

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் குறிப்பாக லைபீரியா, கினியா மற்றும் சியாராலோன் நாடுகளில் இந்நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இது தவிர நைஜீரியா, மாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட மேலும் 5 நாடுளிலும் இந்நோய் பரவியுள்ளது.

இதனை தடுக்க சர்வதேச நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இச்சூழலில், பலியான நபர்களின் எண்ணிக்கை 6,928 ஆக உயர்ந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

அதிலும், குறிப்பாக கடந்த ஒரு வாரத்திற்குள் மட்டும் இந்த நோய் தாக்கி 1000 பேர் பலியாகி உள்ளதாக அந்நிறுவனம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. -http://world.lankasri.com