ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் அணு குண்டுகளைத் தயாரிக்க உதவும் கதிர் வீச்சுப் பொருள்கள் சிக்கியிருப்பதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஈராக்கின் மொசூல் நகரை ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.
அதன்போது அங்குள்ள பல்கலைக்கழகத்திலிருந்து கதிர் வீச்சுப் பொருளை அவர்கள் கைப்பற்றியதாகத் தெரிகிறது.
தங்களிடம் கதிர் வீச்சுப் பொருள் சிக்கியிருப்பதாகவும், அதனைக் கொண்டு அணுக்கதிர் குண்டுகளை தயாரித்துள்ளதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஐ.ஸ் அமைப்பில் இணைந்துள்ள பிரித்தானிய வெடிகுண்டு நிபுணர் ஹமாயூன் தாரிக், சமூக வலைத்தங்களில் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ்-சிடம் அணுக் கதிர் குண்டுகள் இருந்தால், அவற்றை ஈராக், சிரியாவில்தான் அவர்கள் பயன்படுத்துவார்கள்.
மேற்குலக நாடுகளுக்கு எடுத்துச் சென்று வெடிக்கச் செய்ய வாய்ப்பில்லை என பிரித்தானிய ஊடகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. -http://world.lankasri.com